Samstag, 1. Februar 2014

தமிழாலய கீதம்

கல்வியும் கலையும்
நம்மிரு கண்கள்
நல்தமிழ் மொழி
எங்கள் உயிராகும்

பன்மொழிக் கல்வியும்
பல்கலை நுட்பமும்
பயிற்றுவிக்கும் தமிழாலயம்
எங்கள் தமிழாலயம்

தன்மானத் தமிழர்
பண்பாடதனை
தரணியிற் பரப்பிடும் தமிழாலயம்
எங்கள் தமிழாலயம்

பாலகர் நாங்கள்
பாடி ஆடி
படித்து மகிழும் ஆலயம்
எங்கள் தமிழாலயம்

பாவலர் போற்றிட
நாவலர் வாழ்த்திட
என்றென்றும் வாழிய தமிழாலயம்
எங்கள் தமிழாலயம்


தமிழாலய கீதத்திற்கான பின்னணி இசை